என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நீங்கள் தேடியது "சுதந்திர தின விழா கொண்டாட்டம்"
சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொது விருந்து நடந்தது.
திருவாரூர்:
சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொது விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், செயல் அதிகாரி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.
திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். #IndependenceDayIndia #narayanasamy
புதுச்சேரி:
நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. விழாவையொட்டி உப்பளம் மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு மேடையும், கொடிக்கம்பமும் அமைத்திருந்தனர்.
சரியாக காலை 8.58 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் வரவேற்று அழைத்து வந்தார். நேராக மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மீண்டும் மேடைக்கு திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார்.
இதையடுத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச் சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, சிவா, நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, முன்னாள் எம்.பி. ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். #IndependenceDayIndia #narayanasamy
சுதந்திர தின விழாவில் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #IndependenceDayIndia
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதன் முறையாக சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் தொடங்கி கடந்த 33 ஆண்டுகளாக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்த சுதந்திர தின விழா இந்த ஆண்டு தான் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதையொட்டி விழா திடல் பிரமாண்ட முறையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 142 அரசு அலுவலர் களுக்கு நற்சான்றிதழ் களையும், வெம்பக் கோட்டை தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜ் உள்பட 70 காவல் துறையினரின் சிறப்பு சேவைகளை பாராட்டியும், தொடர்ந்து சிறப்பான சேவை செய்யவும் சான் றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
விழாவில் பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து 14 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன.
முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் சிவ ஞானத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன்,மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் வரவேற் றனர்.
மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழா இன்று விமரிசையாக கொண் டாடப்பட்டது. நகராட்சி, பஞ்சாயத்து அலுவல கங்கள், கோர்ட்டு உள் ளிட்ட அரசுத்துறை அலுவல கங்களிலும் கொடியேற்றப்பட்டது. விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கே.வி.எஸ். பள்ளிகளில் பள்ளி செயலாளர் மதன்மோகன் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. #IndependenceDayIndia
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 114 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #IndependenceDayIndia
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 114 பயனாளிகளுக்கு ரூ. 27.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் சிவகங்கை ஆக்ஸ்போர்டு மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சுப்பையா அம்பலம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
பின்னர் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் லதா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தேவ கோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #IndependenceDayIndia
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீமுத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட தேசிய கொடியை வண்ணப்பொடிகளால் உருவாக்கி சாதனை முயற்சி மேற்கொண்டனர். #IndependenceDayIndia
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீமுத்துராஜம் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 130 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 160 அடி நீளம், 81 அடி அகலத்தில், 90 கிலோ வண்ணப்பொடிகளை கொண்டு 50 நிமிடத்தில் சுமார் 13 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். மாணவர்களின் சாதனை முயற்சியை பாராட்டி நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். இயக்குனர் மதன், நிர்வாக ஆலோசனை குழு உறுப்பினர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி எம்.எல்.ஏ.பாரதி மாணவர்களின் சாதனை முயற்சியை நேரில் பார்வையிட்டு வாழ்த்தி பேசினார். தொடர்ந்து செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம், வைத்தீஸ்வரன்கோயில் கூட்டுறவு வங்கி தலைவர் போகர்ரவி, பால் கூட்டுறவு சொசைட்டி தலைவர் அஞ்சம்மாள், துணை தலைவர் பார்த்தசாரதி, ஆதமங்கலம் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் ஜேக்கப் ஞானசெல்வம் வரவேற்றார். துணை முதல்வர் பூவிழி நன்றி கூறினார். #IndependenceDayIndia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X